HIV Disease: 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
எச்.ஐ.வி தொற்று என்பது உலக பொது சுகாதாரத்தின் முக்கிய பிரச்னை. எச்.ஐ.வி என்னும் கொடி நோய் வந்தால் அதை குணப்படுத்த முடியாது. ஆனால், இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்தலாம். உலகம் முழுவதும் எச்.ஐ.வி இறப்புகள் தடுப்பு சிகிச்சைகள் மூலம் குறைந்துள்ளன. இன்னும் பல நாடுகளில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் கிடைப்பதை அதிகரிக்க சர்வதேச நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
63 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. செப்டம்பரில் இருந்து எச்.ஐ.வி பரிசோதனை கருவிகள் தாமதமாக கிடைத்ததால் கைதிகளுக்கு டிசம்பர் மாதத்தில் பரிசோதனை செய்ய வேண்டி இருந்தது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, ”எச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்ட கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் கடந்த சில ஆண்டுகளாக போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும், சில கைதிகள் போதை ஊசியை பயன்படுத்துவதாலும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைக்குள் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருந்த எந்த கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை” என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றர். மேலும், "எச்.ஐ.வி தொற்று இல்லாத கைதிகள் அனைவரும் தப்போது லக்னோவில் உள்ள மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
”போதைப் பொருட்களை பயன்படுத்தும் கைதிகள்"
சிறை நிர்வாகம் விழிப்புடன் உள்ளது. எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகளின் உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் லக்னோ சிறையில் எச்.ஐ.வி தொற்றால் எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை.
தற்போது 63 கைதிகளுக்கு ஏற்பட்ட எச்.ஐ.வி பாதிக்கப்பிற்கான காரணத்தை பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சிறையில் உள்ள மற்ற கைதிகளுக்கும் எச்.ஐ.வி தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். முன்னதாக, கடந்த ஆண்டு உத்தரகண்ட அடுத்த ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்.ஐ.வி என்பது மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் மோசமான தொற்று. தலைவலி, தசைவலி, மூட்டு வலி, சருமத்தில் சொறி, தொண்டை புண், வாய் புண், வயிற்றுப்போக்கு, இருமல், எடை இழப்பு, இரவு நேரத்தில் வியர்த்தல் போன்றவை எச்.ஐ.வி தொற்றின் அறிகுறிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
A R Rahman: இந்தியாவில் கிராமி மழை பொழிகிறது.. விருது வென்ற கலைஞர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து!