தற்கொலை:
டெல்லியில் ராகேஷ் மாலிக் என்பவர் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சாஸ்திரி பவன் ஏழாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
டெல்லி வாசி:
சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறை, மாடியில் இருந்து குதித்தவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 7வது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டவர் ராகேஷ் மாலிக் என்பதை கண்டறிந்தனர். மேலும் அவர் டெல்லியில் வசித்து வருவதாகவும், தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
காவல்துறை:
தற்கொலை தொடர்பாக காவல்துறை தெரிவித்துள்ளதாவது, பாராளுமன்ற தெருவில் உள்ள காவல்துறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஒரு நபர் சாஸ்திரி பவன் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் குற்றவியில் பிரிவு மற்றும் பாராளுமன்ற தெருவில் உள்ள காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தோம் . உடனே ஆம்புலன்சில் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்
தற்கொலை காரணம்
இந்நிலையில் ராகேஸ் மாலிக் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து, தகவல் கிடைக்கவில்லை என்று காவல்துறை துணை ஆணையர் அம்ருதா குகுலோத் தெரிவித்துள்ளார்.
தீவிர விசாரணை:
ராகேஷ் மாலிக் தற்கொலைக்கு யாரேனும் தூண்டுதலாக உள்ளனரா, அவருக்கு பணியில் ஏதேனும் அழுத்தம் தரப்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாஸ்திரி பவனில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: Rifa Mehnu: ரைஃபா மெஹ்னு மரணத்தில் குடும்பத்தினருக்கு சந்தேகம் இந்ததால், புதைக்கப்பட மெஹ்னுவின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரதேச பரிசோதனை
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்