மத்திய அரசு தன்னுடைய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் டிஜிட்டல் பயன்பாட்டை மக்களிடம் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் மக்கள் தங்களுடைய ஆதார் கார்டு, பேன் கார்டு உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மூலமாக காட்டுவதற்கு டிஜி லாக்கர் என்ற செயலியை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் இந்த டிஜி லாக்கரை இனிமேல் வாட்ஸ் அப் மூலம் பயன்படுத்தக்கூடிய புதிய வசதி விரைவில் வர உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த புதிய சேவையை மக்கள் தங்களுடைய வாட்ஸ் அப் மூலம் பயன்படுத்த +91 9013151515 என்ற வாட்ஸ் அப் பாட்டை அழைக்க வேண்டும்.
அந்த நம்பருக்கு ‘Namaste or Hi or Digilocker’ என்று அழைக்க வேண்டும். அதன்மூலம் மக்கள் தங்களுடைய டிஜி லாக்கரிலுள்ள சேவைகளை பயன்படுத்த முடியும். டிஜி லாக்கரில் மக்கள் தங்களுடைய பேன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்.இ10வகுப்பு, வாகன சான்றிதழ், இருசக்கர வாகன காப்பீட்டு உரிமம், காப்பீட்டு உரிமம் ஆகியவற்றை பயன்படுத்த முடியும்.
கொரோனா காலத்தில் மத்திய அரசு வாட்ஸ் அப் பாட் மூலம் கொரோனா தடுப்பூசி, கொரோனா சிகிச்சை தொடர்பான சேவைகளை அளித்து வந்தது. அந்த வகையில் தற்போது டிஜி லாக்கர் சேவையையும் இந்த பாட் மூலம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் டிஜிட்டல் தளத்தை எளிதாக பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. இந்த சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்