வட இந்தியாவைச் சேர்ந்த பல தொழிலாளர்களும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் புலம்பெயர்ந்து பணியாற்றி வருகின்றனர். கேரளாவின் முக்கிய மாவட்டமாக திகழ்வது எர்ணாகுளம். எர்ணாகுளத்திலும் வடமாநில தொழிலாளர்கள் உள்பட பலரும் பணியாற்றி வருகின்றனர்.


5 வயது சிறுமி:


எர்ணாகுளம் ஆலுவா அருகே அமைந்துள்ளது காரேஜ் ஜங்ஷன் பகுதி. இந்த பகுதியில் பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பீகாரில் இருந்து வந்த தம்பதிகள் தங்களது 5 வயது மகளுடன் வசித்து வந்துள்ளனர்.


இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் அந்த சிறுமியை காணவில்லை. இதையடுத்து, பெற்றோர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தேடியுள்ளனர். ஆனாலும், சிறுமியை கிடைக்காததால் காவல்துறையில் புார் அளித்துள்ளனர். இதையடுத்து, சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.


மூட்டையில் சடலம்:


இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள சந்தையின் பின்புறத்தில் மூட்டை ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூட்டையை பிரித்து பார்த்தபோது சிறுமி ஒருவரின் உடல் படுகாயங்களுடன் சடலமாக இருந்துள்ளது. போலீசாரின் விசரணையில் காணாமல் போன 5 வயது சிறுமியே சடலமாக மீட்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.


சிறுமியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.


பாலியல் வன்கொடுமை:


அப்போது, அந்த சிறுமியை அந்த சிறுமி வசித்த பகுதியில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த மற்றொரு புலம்பெயர்ந்த தொழிலாளி அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. பின்னர், விசாரணையில் அந்த நபரே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும், அந்த சிறுமியின் உடலை மூட்டையில் கட்டி வீசியதும் தெரியவந்தது.  


போலீசார் விசாரணையில் அந்த மார்க்கெட் பகுதியில் சிறுமியை அந்த பீகார் தொழிலாளி அழைத்துச் சென்றதும், அவரிடம் அந்த பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் கேட்டபோது அந்த சிறுமி தன்னுடைய மகள் என்றும் கடைக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார். 5 வயது சிறுமி என்றும் பாராமல் சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து பீகார் தொழிலாளி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் அந்த சிறுமியின் குடும்பத்தினரிடம், சிறுமியை மீண்டும் ஒப்படைக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க:Crime: காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி.. பள்ளி தோழி உட்பட 3 பேர் கைது..!


மேலும் படிக்க: Crime: எவ்வளவோ முயற்சித்த போலீஸ்..! ஜஸ்ட் மிஸ்ஸான கொள்ளையர்கள்.. 10 நாள் கழித்து காத்திருந்த ட்விஸ்ட்..! நடந்தது என்ன ?