காவலர்கள் அதிர்ச்சி

 

ஸ்ரீபெரும்புதூர் ( sriperumbudur news ) : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சிவந்தாங்கல் பாஞ்சாலப்பட்டு , பகுதியில் வசித்து வருபவர் பிரவீன். இவர் அதே பகுதியில் கௌதம் என்ற கடையின் பெட்யரில் கோல்ட் சில்வர் & கவரிங் நகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவில் சிவந்தாங்கல் மற்றும் பாஞ்சாலப்பட்டு பகுதியில் இரண்டு போலீசார் இருசக்கர வாகனத்தில்,  ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது,  போலீசாரை பார்த்து பாஞ்சாலப்பட்டில் உள்ள கௌதம் நகைக்கடையிலிந்து வெளியே வந்த இரண்டு வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர். இதைப் பார்த்த இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் வந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

காவல்துறையினர் கோட்டை விட்டது 

 

கடையிலிருந்து வெளியே ஓடிய இரண்டு இளைஞர்களோடு,  வந்த மற்றொரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து போலீசார் கையில் அகப்படாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர். போலீசார் அன்று இரவு முழுவதும் தேடியும் மூன்று கொள்ளையர்களும் அகப்படவில்லை. சுற்றுவட்டார காவல் நிலையத்தில் உள்ள காவலர்களை காவல்துறையினர் உஷார் படுத்தியும் மூன்று பேர் லாபமாக தப்பி சென்றனர். கையும் களவுமாக கொள்ளையர்களைப் பிடிக்க வேண்டிய இடத்தில், காவல்துறையினர் கோட்டை விட்டது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.



 

சிசிடிவி காட்சி

 

மேலும் நகைக்கடையின் உரிமையாளர் பிரவினை வரவழைத்து,  நகை கடைக்குள் சென்று பார்த்த பொழுது ஒரு கிலோ வெள்ளி திருடு போயிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், சிசிடிவி காட்சியில் பதிவான கொள்ளையர்கள் சென்னை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ஏற்கனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.



 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை

 

கொள்ளையர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டபோது, சென்னை எழில் நகரை சேர்ந்த பருக்ஷேக் வ/24, KKநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (எ) கொட்டா கார்த்திக் ஆகிய இரண்டு பேரை போலீசார் பிடித்தனர். மேலும் ஒருவரான கருப்புசாமி தப்பி சென்று விட்டார். இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது தாங்கள் திருடிய வெள்ளி பொருட்களை போரூரிள்ள வாஷிமிடம் விற்றதாக கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து போரூர் சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வாஷிமை கைது செய்து வாசிமிடமிருந்த உருக்கிய நிலையில் ஒரு கிலோ வெள்ளியை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து பரூக் ஷேக், கார்த்திக் (எ) கொட்டா கார்த்திக்,வாஷிம் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான கருப்பு சாமியை போலீசார் தேடி வருகின்றனர். 10 நாட்களுக்கு முன்பு தப்பிச்சென்ற குற்றவாளிகளை போலீசார் தற்பொழுது பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது