உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா என்னும் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை வாகனம் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கால்வாயில் விழுந்த கார்


உத்தரபிரதேச மாநிலம் எட்டா பகுதியை சேர்ந்தவர் நீரஜ் (வயது 35). இவரது மனைவி வினிதா (வயது 25). நிறைமாத கர்ப்பிணியான வினிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், உடனே அவரை ஒரு காரில் ஏற்றி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்களோடு இரண்டு உறவினர்களும் உடன் சென்றுள்ளனர். காரை டிரைவர் சிவம் குமார் என்பவர் ஓட்டியுள்ளார். அவசரம் என்பதால் சாலையில் வேகமாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த கல்வாய்க்குள் விழுந்தது. இந்த சம்பவத்தின் காரில் இருந்த கர்ப்பிணி வினிதா மற்றும் அவரது கணவர், கார் ஓட்டுநர் உட்பட 5 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.



கால்வாய் கட்டையில் மோதியது


இறந்த அனைவரும் கஸ்கஞ்ச் மாவட்டத்தின் கஞ்சதுந்த்வாரா நகரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கார் எட்டா மற்றும் கஸ்கஞ்ச் எல்லையில் உள்ள ஜிர்சாமி கால்வாயின் கட்டையில் மோதியுள்ளது. மோதிய பின் நீர் நிரம்பி வழியும் கால்வாயில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து கோட்வாலி டெஹாட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Finance Minister On Loan: கடனை திரும்பப் பெற மோசமாக நடந்து கொள்ளக் கூடாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை


மருத்துவ பரிசோதனைக்காக சென்றவர்கள்


கால்வாயில் விழும் முன் கார் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. கார் விபத்துக்குள்ளான சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் ஒரு மணி நேர கடின உழைப்புக்கு பிறகே உடல்களை மீட்க முடிந்தது. தகவலின்படி, குடும்ப உறுப்பினர்கள், மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசையர் காரில் எட்டா மருத்துவக் கல்லூரியில் வினிதா என்பவரின் மருத்துவப் பரிசோதனைக்கு சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது.



மருத்துவரை வீட்டிற்கே வர சொல்கிறேன் என்றேன்


மரண விபத்து பற்றி மற்றொரு குடும்ப உறுப்பினர் மொஹரம் சிங் கூறுகையில், "நாங்கள் உறவுமுறையில் மருமகன், அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை, எனவே அவர் அவரை எட்டாவில் உள்ள மருத்துவரிடம் காட்ட விரும்பினார். ஆனால் நான் அவரிடம் மருத்துவரை வீட்டிற்கு அழைக்கிறேன் என்றேன், ஆனால் அவர்தான் மருத்துவமனை செல்லலாம் என வற்புறுத்தினார். அவர் தனது மனைவி மோசமான நிலையில் இருப்பதாகக் கூறியதால் அவசரமாக கிளம்பி சென்றோம், "என்றார்.