தவிக்கும் புலி குட்டிகள்... தாயுடன் சேர்க்க தொடர் முயற்சி... களத்தில் இறங்கிய 300 பேர் கொண்ட குழு..!

72 மணி நேரமாகியும் தாய் புலியை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

Continues below advertisement

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று முன்தினம் 4 புலிக்குட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. ஆத்மகுரு வனப் பகுதிக்கு உட்பட்ட கும்மாடபுரம் கிராமத்தில் நான்கு புலிக்குட்டிகளை கிராம மக்கள் கண்டெடுத்தனர்.

Continues below advertisement

குட்டிகளை பாதுகாத்த கிராம மக்கள்:

நாய்களின் தாக்குதலில் இருந்து குட்டிகளை பாதுகாக்க கிராம மக்கள் அவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தனர்.  பின்னர், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புலிக்குட்டிகளை மீண்டும் தாயுடன் இணைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், 72 மணி நேரமாகியும் தாய் புலியை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் நந்தியால்-கர்னூல் பகுதியில் வனத்துறையினர் தாய் புலியை தேடி வருகின்றனர்.

தாய் ஆக்ரோஷமாக மாறுமோ என அச்சம்:

குட்டிகளை இழந்ததால் மனமுடைந்த புலி, ஆக்ரோஷமாக மாறக்கூடும் என கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர்.

தாய் புலியை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்த வனத்துறை அதிகாரி ஒருவர், "வனத்துறையினர் ட்ராப் கேமராக்களை கொண்டு 300 பேர் கொண்ட தனிப்படையை அமைத்து புலியை தேடி வருகின்றனர்.

புலியின் கால் தடத்தை கண்டுபிடித்துள்ளதாகவும் விரைவில் அதை பிடிப்போம் என்றும் நம்புகிறோம்.  குட்டிகளை மிருகக்காட்சிசாலைக்கு மாற்றுவது கடைசி ஆப்ஷன். குட்டிகளை மீண்டும் தங்கள் தாயுடன் இணைக்க விரும்புகிறோம்.

வனத்துறை அதிகாரி விளக்கம்:

புலி குட்டிகளை ஏற்றுக்கொண்டு மீண்டும் காட்டிற்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறோம்" என்றார். இதுகுறித்து ஆந்திர வனத்துறையின் கூடுதல் தலைமை வன பாதுகாவலர் சாந்தி பிரியா பாண்டே கூறுகையில், "தாய் புலி, குட்டிகளை மீண்டும் அழைத்து கொள்ள வேண்டும். அது ஒரு நல்ல முடிவாக இருக்கும்.

இல்லையெனில், அடுத்த என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும். குட்டிகள் எப்படி அங்கு சென்றன என்பது இன்னும் நமக்கு ஒரு புதிராகவே உள்ளது. புலியை காட்டு நாய்கள் கூட்டமாக துரத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன். அவசரத்தில் அது குட்டிகளை விட்டு சென்றிருக்கலாம்.

நாம் அவற்றை சிறிது நேரம் வளர்த்து, பின்னர் அவற்றை மிருகக்காட்சிசாலைக்கு எடுத்துச் செல்கிறோமா அல்லது கூண்டில் அடைத்து வைக்க போகிறோமா? அதற்கு நிறைய அனுமதிகள் தேவை. தலைமை வனவிலங்கு காப்பாளர் தலைமையிலான குழுவை அமைக்க வேண்டும் என்று நெறிமுறை கூறுகிறது" என்றார்.

”குட்டிகளின் மீது மனித தடம் பதியாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில், அவை வனத்தின் தடத்தை குடிகளில் அழிக்கக்கூடும். இதன் காரணமாக, புலி அவற்றை நிராகரிக்கக்கூடும்" என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola