புதுச்சேரி: ஒடிசா மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 8½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை செய்பவர்களை போலீசார் அடிக்கடி கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்த நிலையில் வட மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


அதன்பேரில் ஒதியஞ்சாலை காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வந்த ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு பையில் 4 பார்சல்கள் இருந்தன. அதனை போலீசார் பிரித்து பார்த்த போது அதில் 8 கிலோ 400 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை ரயில் மூலம் புதுவைக்கு கடத்தி வந்தது யார் என்று விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண