ஜெர்மனியில் இருந்து 'பிரீமென்ட்டில் ஹைவே' என்ற சரக்கு கப்பல் 3,800-க்கும் மேற்பட்ட கார்களுடன் இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் முழுவதும் இந்திய மாலுமிகளால் இயக்கப்பட்டது. அந்த கப்பலில் 21 இந்திய மாலுமிகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி நெதர்லாந்து நாட்டில் உள்ள அமிலாந்து தீவுக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது 'பிரீமென்ட்டில் ஹைவே' சரக்கு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. இதில் மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.



20 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை நெதர்லாந்து கடலோர காவல்படையினர் மீட்டனர். இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட சரக்கு கப்பலில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட 20 இந்தியர்களும் பத்திரமாக நாடு திரும்பியதாக நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாவது: பனாமாவுக்கு சொந்தமான'பெர்மான்டில் ஹைவே' என்ற சரக்கு கப்பல் ஜெர்மனியில் இருந்து 3,800 கார்களை ஏற்றிக்கொண்டு எகிப்து நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில், 498 மின்சார வாகனங்களும் அடக்கம். ஜூலை 25-ம் தேதி நெதர்லாந்து கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த கப்பலின் மேல் தளத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.


அதிலிருந்து தப்பிக்க, பணியாளர்கள் சிலர் கடலில் குதித்தனர். இதில், இந்திய பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 20 இந்திய பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதுடன்  தாயகம் அழைத்துவரப்பட்டனர். இறந்த இந்தியரின் உடலை கொண்டு வரும் பணியில் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 


கடினமான நேரத்தில் உடனிருந்து உதவியதுடன் தைரியமும் அளித்த நெதர்லாந்து அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். தீப்பிடித்த கப்பல் நெதர்லாந்தின் வடகிழக்கில் உள்ள துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த கப்பல் 11 அடுக்குகள் கொண்டது. அந்த கப்பலில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. அதே நேரத்தில் மின்சார வாகன பேட்டரி வெடித்து சிதறியது இந்த விபத்துக்கு காரணமாக இருக்காலம் என கப்பல் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். 


மேலும் படிக்க,


Chandrayaan 3: இனிமேதான் இஸ்ரோவுக்கு வேலையே.. சவாலில் சந்திரயான் 3... அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?..


Thailand Accident: தூக்கி வீசப்பட்ட லாரி...தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி விபத்து... 8 பேர் உயிரிழந்த சோகம்!