ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையில் நீர்நிலைகளில் நீராடி, தர்பணம் செய்து மறைந்த முன்னோர் வழிபாடுகளை மேற்கொள்ளவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 7.11 மணிக்கு தொடங்கி மறுநாள் இரவு 7.19 மணி வரை அமாவாசை நேரமாக பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


Solar Eclipse 2021: ஆன்மிக செயல்களுக்கு ஏற்ற தினம் இன்று!


 


ஆடி அமாவாசை நாளன்று புதுச்சேரியில் உள்ள சங்கராபரணி ஆற்றின் கரையில் உள்ள திருக்காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நதிக்கரை, கங்கைவராக நதீஸ்வரர் கோயில், தீர்த்தவாரி கடற்கரை, காரைக்கால் மாவட்டத்திலுள்ள திருநள்ளாறு, காவிரி நதிக்கரைகளில் அமாவாசை தர்பணம் செய்வதற்காக அதிக அளவில் மக்கள் கூடுவது வழக்கம்.  கொரோனா மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை அமலில் இருக்கும் நிலையில் தர்பணம் செய்வதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் பட்சத்தில் தொற்று பரவுவதற்கான வாய்ப்புள்ளதால் நீர்நிலைகளில் தர்பணம் செய்ய புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. 


புதுச்சேரி கடற்கரையை பொறுத்தவரை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபயிற்சி மட்டும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான தடை தொடர்வது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க:


கரூர்: அம்மன் கண்ணில் விபூதி... சாமி கண் திறந்ததாக பரவிய தகவலால் கூடிய கூட்டம்!


பச்சை... ஊதா... மஞ்சள்... ரூ.3லட்சம் மதிப்புள்ள ரூபாய் மாலையில் ஜொலித்த ஆதி மாரியம்மன்!