கரூர் சுங்ககேட் அருகே குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் சிறப்பான விசேஷங்கள் நடைபெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், திருமஞ்சள், மஞ்சள், அபிஷேக பொடி, சந்தனம், விபூதி, பன்னீர் மற்றும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. 




அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் விபூதி அலங்காரத்தில் காட்சி


அதைத்தொடர்ந்து மூலவர் ஆதி மாரியம்மனுக்கு 3 லட்சம் மதிப்பிலான புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மற்றும் சுவாமிக்கு சந்தனக்காப்பு சாட்டப்பட்டு பல்வேறு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சுவாமி ஆதி மாரியம்மனுக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூரத்துடன் மகா தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது.




            அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் மூன்று லட்சம் பணத்தை  அலங்கார காட்சி


ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாதம் இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு கரன்சி (பணம்) அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஆதி மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். பின்னர் சுவாமி தரிசனம் செய்த அனைத்து பக்தர்களுக்கும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் ஆலயத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 




அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன்  தீபாரதனை காட்சி 


கரூர் நகர பகுதியில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை சிறப்பிக்கும் வகையில் தஞ்சை புன்னைநல்லூர் புற்றுமாரியம்மன் அலங்காரத்தில் ஸ்வாமி வேம்பு மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதைத் தொடர்ந்து தஞ்சை புன்னைநல்லூர் புற்றுக்கண் மாரியம்மன் அலங்காரத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர். 




அருள்மிகு வேம்பு மாரியம்மன் புன்னைநல்லூர் மாரியம்மனாக காட்சி


அதேபோல், கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில், த.பாளையம் முத்துமாரியம்மன் ஆலயத்திலும், அரவக்குறிச்சி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் இதுபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் மற்றும் பகவதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது பல்வேறு ஆலயங்களில் சுவாமிக்கு வளையல் அலங்காரம் சந்தன காப்பு அலங்காரம் செய்திருந்தனர். 




அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் மஞ்சள் பட்டாடை யில் காட்சி


இன்னிலையில், நேற்று புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு மூதாட்டி கழுத்தில் இருந்த 5 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கருவியில் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலை ஏழை வாங்கல் அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் திறந்து இருப்பதாக தகவல் வெளியானதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி அனைவருக்கும் தரிசனம் செய்யுமாறு ஆலயத்தின் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 




அருள்மிகு ஏழை வாங்கலம்மன் கண் திறந்தபடி காட்சி


கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு ஆலயங்களில் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து ஆலயத்தில் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.