மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மினி ரத்னா நிறுவனத்தின் துணை நிறுவனமான கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் மற்றும் இஞ்சினியர்ஸ் லிமிடெட் (Garden Reach Shipbuilders & Engineers Limited)-ல் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுகான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கப்பல் கட்டும் தளத்தில் நிர்வாகம் மற்றும் நிர்வாகம் அல்லாத பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் மற்றும் பொதுப்பணி துறையினர் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பைப் ஃபிட்டர்
கம்யூட்டர் ஆப்ரேட்டர்
பெயிண்டர்
கல்வித் தகுதி:
இந்த வேலைகளுக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
கம்யூட்டர் ஆப்ரேட்டர் பணிக்கு தொழில்நுட்பம் சார்ந்து கம்யூட்டரில் பணி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 24 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
பைப் ஃபிட்டர் - ரூ. 24,000 / 2- 26,000
கம்யூட்டர் ஆப்ரேட்டர் - ரூ. 24,000 / 2- 26,000
பெயிண்ட் - ரூ. 24,000 / 2- 26,000
தேர்ந்தெடுக்கும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வு:
எப்படி விண்ணப்பிப்பது?
www.grse.in / https://jobapply.in/grse2023 இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கவனிக்க..
விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து அஞ்சல் மூலம் புது டெல்லி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
Post Box No. 3076,
Lodhi Road,
New Delhi – 110003
அறிவிப்பின் முழு விவரம் அறிய https://grse.in/current-jobs/PDFs/Detailed_Advt_SRD_Officers_2023-02.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.02.2023
மேலும் வாசிக்க..