கோவை மதுக்கரை பகுதியில் கோயில் திருவிழாவின் போது, மோதிக் கொண்ட இளைஞர்களை 100 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்பிவிக்குமாறு கூறி உதவி ஆய்வாளர் நூதன தண்டனை வழங்கினார். கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த மரப்பாலம் பகுதியில் ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அப்போது ஜமாப் இசைக்கு ஏற்ப இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்த போது, மற்றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் காலை மிதித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மதுக்கரை காவல் துறையினருக்கு புகார் அளித்தனர்.
என்னிடம் போனில் பேசினாலே வைபிரேஷன் இருக்கும்...’ -அன்னபூரணியின் ஆண்ட்ராய்டு அனுபவங்கள்!
இது குறித்து தகவலறிந்த மதுக்கரை காவல் துறையினர் உடனடியாக விரைந்து வந்து இரு தரப்பையும் சேர்ந்த 10 பேரைப் பிடித்தனர். இதையடுத்து அவர்களை விசாரணைக்காக மதுக்கரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு காவல் உதவி ஆய்வாளர் கவியரசன் தலைமையில் காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 100 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்தால், வீட்டிற்கு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
‛பில்லா மோதிரம்... அரபு வளையல்கள்...’ அன்னபூர்ணி அரசு அம்மாவின் மேக்கப் கலெக்ஷன்ஸ் இவை தான்!
இதையடுத்து இளைஞர்கள் அனைவரும் சுமார் இரண்டரை மணி நேரம் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒவ்வொருவராக காவல் உதவி ஆய்வாளரிடம் ஒப்புவித்தனர். இதையடுத்து அனைவருக்கும் அறிவுரை வழங்கிய காவல் துறையினர், இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து இளைஞர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
‛ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்