கோவை : 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கைது

நிலத்திற்கு டி.டி.சி.பி ஒப்புதல் வாங்க தடையில்லாத சான்றிதழ் அளிக்க உதவிப் பொறியாளர் செந்தில் வேல் என்பவர் 2 லட்ச ரூபாய் பணம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

Continues below advertisement

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Continues below advertisement

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் வேங்கை செல்வ பிரபு. இவர் தனது நிலத்திற்கு டி.டி.சி.பி. ஒப்புதல் பெறுவதற்காக தடையில்லா சான்று வழங்க கோரி, பொள்ளாச்சி பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ள நீர்வளத் ஆதார அமைப்பு உதவி பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த நிலத்திற்கு டி.டி.சி.பி ஒப்புதல் வாங்க தடையில்லாத சான்றிதழ் அளிக்க உதவிப் பொறியாளர் செந்தில் வேல் என்பவர் 2 லட்ச ரூபாய் பணம் லஞ்சமாக கேட்டுள்ளார். இலஞ்சம் கொடுக்க மனம் இல்லாத வேங்கை செல்வ பிரபு, இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க : கோவை: எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை

கோவை தனியார் பள்ளியில் இரும்பு கம்பம் சாய்ந்து மாணவி படுகாயம்: பள்ளி நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப் பதிவு

இதனைத் தொடர்ந்து இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இராசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை உதவிப் பொறியாளரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளனர். இந்த ஆலோசணைப்படி முதல் தவணையாக உதவிப் பொறியாளர் செந்தில்வேலிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை வேங்கை செல்வ பிரபு கொடுத்துள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் மறைந்திருந்து இலஞ்சம் வாங்கும் போது உதவிப் பொறியாளர் செந்தில் வேலை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து செந்தில் வேலை அலுவலகத்தில் வைத்து இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் உதவிப் பொறியாளர் செந்தில் வேலை இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க : Abp Exclusive Student Suicide : தொடரும் சோகம்; அதிகரிக்கும் மாணவ தற்கொலைகள்: காரணங்களும் தீர்வுகளும்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola