கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய காவலர் மணியரசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை மாவட்டம் ஆழியாறு பகுதியை சேர்ந்தவர் மணியரசு. 30 வயதான இவர் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். தற்போது பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் மணியரசுவிற்கு திருமண ஏற்பாடுகள், அவரது குடும்பத்தினர் சார்பில் செய்யப்பட்டு வந்தது. வருகின்ற ஒன்றாம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.


இந்நிலையில் நேற்றிரவு காவல் நிலையத்திற்கு பணிக்கு செல்லாமல், காவல் நிலைய வளாகத்திற்குள் இருந்த காவலர் குடியிருப்பில் இருந்துள்ளார். அப்போது தனது அறையில் காவலர் மணியரசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மணியரசுவின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவலர் தற்கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் படிக்க : கோவையில் பி.எம்.டபுள்யூ காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது.. இத்தனை கிலோ கஞ்சா பறிமுதல்!


கோவையில் வேளாண் பல்கலைகழக மாணவர் தற்கொலை- காவல்துறையினர் தீவிர விசாரணை


காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காவலர் மணியரசுவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் விருப்பமில்லாத திருமணம் ஏற்பாடுகள் நடந்து வந்ததால் காவலர் மணியரசு மன உளைச்சலில் இருந்து வந்ததும், இதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவலர் மணியரசு விருப்பமில்லாத திருமண ஏற்பாட்டினால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தற்கொலைக்கு வேறு எதேனும் காரணங்கள் இருக்கிறா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண