முருகக்கடவுளை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகள் அமைந்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்க கோரி, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாடலாசிரியர் யுகபாரதி எழுதி, டி.இமான் இசையமைத்துள்ள உள்ள உருகுதைய்யா பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், தமிழ் கடவுளான முருகனை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இப்பாடலை படத்திலிருந்து நீக்க கோரி அகில இந்திய நேதாஜி கட்சியின் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அக்கட்சியின் நிறுவனர் ராகுல் காந்தி கூறும் போது, பாடல் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்ட போதும், இன்று படம் வெளியான பிறகு தான் அதில் முருகனை இழிவுபடுத்தும் காட்சிகள் அமைந்திருப்பது தெரியவந்ததாகவும், எனவே பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் படத்தில் நடித்த சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி.இமான், கடவுள் வாழ்த்து பாடல் என தெரிந்தும் இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளை அமைத்த பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளதாகவும், இவ்வழக்கு இந்து கடவுள்களையும், நம்பிக்கைகளையும், இழிவுபடுத்துவோருக்கு ஒரு பாடமாக இருக்கும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.


Etharkkum Thunindhavan Review: துணிந்து பார்க்கும் படமா எதற்கும் துணிந்தவன்? உள்ளதை உள்ளபடி சொல்லும் விமர்சனம்!


சூர்யாவின் முந்தைய படங்கள் ஒடிடி தளத்தில் வெளியான நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டர்களில் வெளியாகியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து சூர்யாவின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட போது, படத்தை திரையிடுவதை எதிர்த்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாதுகாப்பு நலன் கருதி சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண