நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு தினங்களாக கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீலகிரி, வால்பாறை மட்டுமின்றி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பாகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : School, College Leave : கொட்டித் தீர்க்கும் கனமழை.. இந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை..
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், காவிரி கரையோர பகுதிகளில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி கரையோரங்களில் தண்ணீர் அதிகளவில் பாய்ந்து வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஈரோட்டிலும் பவானிசாகர் அணை நிரம்பி வழிவதால் உபரிநீர் தொடர்ந்த வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, பவானிசாகர் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மழையில் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்றும், நீர் நிரம்பியுள்ள இடங்களில் செல்பி மோகத்தால் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கரூர்: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் - பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்படும் கரையோர மக்கள்..!
மேலும் படிக்க : தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு: தமிழை தேர்ந்தெடுத்தவர்களுக்கு தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வினாத்தாள்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்