நியூயார்க் டைம்ஸ் சதுக்க திரையில் ஈஷா மஹாசிவராத்திரி வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த நியூயார்க் நகரவாசிகள் "ஹர ஹர மகாதேவ்" என்ற பாடலுக்கு ஆடி மகிழ்ந்தனர். 


நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்:


கடந்த திங்கட்கிழமை இரவு, "சத்குருவுடன் மஹாசிவராத்திரியின் மகிழ்வான காணொளி - உலகில் அதிகம் பார்க்கப்பட்ட மஹாசிவராத்திரி நிகழ்வு" என்ற செய்தி நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தின் திரைகளை ஒளிரச் செய்தது.


இது குறித்த வீடியோவை சத்குரு  தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 


அதில் அவர் "டைம்ஸ் சதுக்கம், நியூயார்க் மகாசிவராத்திரியை வரவேற்கிறது. மனித ஆற்றலை மேம்படுத்தும் கொண்டாட்டமாகவும், மாற்றத்திற்கான வாய்ப்பாகவும் இருக்கும் சிவனின் மகத்துவம் வாய்ந்த இரவின் முக்கியத்துவத்தை உலகம் உணர்ந்து வருகிறது. நாம் இதனை நிகழச் செய்வோம்." என்று பதிவிட்டுள்ளார்.


உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில்,  நாளை (மார்ச் 8-ம் தேதி)  மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை  கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் மஹாசிவராத்திரி விழாவில் நேரடியாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் பதிவு செய்யலாம்.


நாளை சிவராத்திரி:


இவ்விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்புவோர் https://isha.sadhguru.org/mahashivratri/ta/attend-in-person/ அல்லது isha.co/tnmsr2024-VAT என்ற லிங்கை பயன்படுத்தி உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை கொடுத்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். நேரில் பதிவு செய்ய விரும்புவோர், நாளை (மார்ச் 8 ஆம் தேதி)  கோவை ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பதிவு மையத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருபருக்கு முன்னிரிமை என்ற அடிப்படையில் இந்த பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க 


TNPSC Group 1 Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: பார்ப்பது எப்படி?


PM Modi TN Visit: மீண்டும் மீண்டுமா..! மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - திட்டங்கள் என்ன?