கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துப்பாக்கி உடன் போஸ் கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை காந்திபுரம் அருகே உள்ள சிறைச் சாலை மைதானத்தில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சியின் திறப்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்தனர். அப்போது குத்துவிளக்கு ஏற்றி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் இருந்து வாங்கி சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தார். அப்போது எதிரே இருந்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நோக்கி குறி வைத்தபடி துப்பாக்கியை ஏந்தியபடி போஸ் கொடுத்தார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க: 'Agnipath' Scheme : எரியும் ரயில்..! அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு..! வன்முறைக்களமாக மாறிய பீகார்..!



இதனிடையே இந்தக் காட்சிகளை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கேஜிஎஃப் திரைப்படத்தின் பின்னணி இசையை போட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பலரும் பகிர்ந்து வரும் நிலையில், சிலர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


மேலும் படிக்க: ‛சமாதானம் பேச வர்றாங்களாம்...’ அதிமுக தலைமைப் போட்டி... மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் போட்டோ போட்டி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண