இந்தியாவின் பாதுகாப்பில் ராணுவத்தின் சேவை இன்றியமையாததாக உள்ளது. இந்த நிலையில், நாட்டின் ராணுவத்திற்கு வீரர்களை சேர்ப்பதற்காக அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி, 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ராணுவத்தில் பணியாற்ற முடியும் என்றும், பின்னர் அவர்களுக்கு 11 முதல் 12 லட்சம் ரூபாய் வரை தொகை அளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.






மத்திய அரசின் இந்த அக்னிபத் முறைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, பீகார் மாநிலத்தில் இளைஞர்களும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த மாநிலத்தில் நேற்றே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது.




பீகாரில் உள்ள அர்ரா ரயில்நிலையத்தில் ரயில் தண்டவாளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது அந்த மாநில போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை களைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெகனாபாத்தில் மாணவர்கள் தரப்பினர் போலீசாருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களது கல்வீச்சு சம்பவத்தினால் போலீசார், பொதுமக்கள் காயம் அடைந்தனர்.






பீகாரில் உள்ள நவாடா பகுதியில் சாலையில் டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நவாடா ரயில்நிலையத்தில் தண்டவாளத்தில் டயர்களை கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரயிலுக்கு தீ வைத்து வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் பேருந்துகளை அடித்து நொறுக்கி வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.   


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண