கோயம்பத்தூரில், நாளை ஜனவரி 25 ஆம் தேதி, எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். 


மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின்கசிவு உள்ளிட்ட பிரச்னைகள், ஏற்படாதவாறு சரி செய்யப்படும். 


கோவையில் நாளை மின்தடை: 25-01-2025


இந்நிலையில், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இதனால், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read: TVK Vijay: புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பிய விஜய்.! தனியாக தவெக நிர்வாகிகளுடன் விஜய் பேசியது என்ன?


மின்தடை செய்யப்படும் இடங்கள்:


பீளமேடு துணை மின் நிலையம்: அண்ணா நகர், ஆறுமுகம் லே - அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு,  திருவள்ளுவர் நகர்,பீளமேடு துணை மின் நிலையம்: பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட் மற்றும் உடையாம்பாளையம்


ரேஸ் கோர்ஸ் துணை மின் நிலையம்: ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீ பார்த்தி நகர், சுசிலா நகர், ருக்மணி நகர், பாரதி பூங்கா சாலை (சாலைகள் 1-6 வரை), பாப்பம்மாள் லேயவுட்,ரேஸ்கோர்ஸ், கருணாநிதி நகர்  அங்கண்ணன் வீதி, பார்க் டவுன்,தாமஸ் பார்க் மற்றும் காமராஜர் சாலை, அவிநாசி சாலையின் ஒரு பகுதி (அண்ணா சிலையிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை) திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை) புளியகுளம் ரோடு ( சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை).


பராமரிப்பு பணிகள்:


தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன. 


மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளாது. 


இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை இன்றே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்


Also Read: RRB Recruitment 2025: ரயில்வேயில் 32,000 காலிப்பணியிடங்கள்.! விண்ணப்பிப்பது எப்படி?