இந்திய ரயில்வே துறையில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்த பணிக்கு விண்ணப்பிக்க எப்போது கடைசி நாள், கட்டணம் எவ்வளவு , தேர்வு முறை எப்படி என்பது குறித்தான தகவலை பார்ப்போம். 


ரயில்வேயில் காலிப் பணியிடங்கள்


ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் மூலம், ரயில்வே துறையில் குருப் டி பிரிவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பதவிகளுக்கான விண்ணப்பங்களை நிரப்புவதற்கான காலக்கெடுவானது, வரும் பிப்ரவரி 22 ஆம் தேதியே கடைசி நாளாகும்.  விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கான திருத்தமானது, பிப்ரவரி 25 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 அன்று முடிவடையும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரிவான தகவல்களுக்கு RRB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.


Also Read: SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?


விண்ணப்பிக்கும் முறை:


படி 1: அதிகாரப்பூர்வ இணையதளமான rrbapply வலைதளத்திற்குச் செல்லவும்


படி 2: 2024 ஆம் ஆண்டின் எந்த இந்திய ரயில்வேயின் CEN க்கும் ஒரு கணக்கை உருவாக்கவும். கணக்கை உருவாக்க தேவையான விவரங்களை நிரப்பவும்.


படி 3: விவரங்களை நிரப்பவும்.


படி 4: கட்டணத் தொகையைச் செலுத்தவும்


கணக்கை உருவாக்கும் படிவத்தில்,  கேட்கப்படும் விவரங்கள் (மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி உட்பட) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்வே கணக்கை உருவாக்கியவுடன் எந்த நிலையிலும் மாற்றியமைக்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ்எல்சி/மெட்ரிகுலேஷன்/எஸ்எஸ்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி தங்கள் பெயர், தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். மேலும், சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ரோல் எண், சான்றிதழ் எண் மற்றும் எஸ்எஸ்எல்சி/மெட்ரிகுலேஷன்/எஸ்எஸ்சி தேர்ச்சி பெற்ற ஆண்டு ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.


ஊதியம்


7வது CPC Pay Matrix இன் நிலை 1ல் 32,438 பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு இயக்கம் நடத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?


தேர்வு முறை:


இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் ஒரே கட்டமாக நடைபெறும். 
இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் உடல் திறன் தேர்வில் (PET) தோன்ற வேண்டும். அதைத் தொடர்ந்து ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.


பரீட்சை/ CBT இல் எந்தவொரு அநீதியான வழியிலும் எந்தவொரு விண்ணப்பதாரரும் ஈடுபட்டிருந்தால், விண்ணப்பத்தாரர் இடத்தில், வேறு ஒருவரைத் தேர்வில் எழுத அனுப்பினால், ஆள்மாறாட்டம் செய்ய முயற்சித்தால், தேர்வில் தோற்றுவதில் இருந்து தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.