கோயம்பத்தூரில், நாளை ஜனவரி 22 ஆம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம்.
மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும்.
கோவையில் நாளை மின்தடை: 22-01-2025
இந்நிலையில், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: PM Modi-Trump Inauguration: சீனாவுக்கு அழைப்பு; மோடிக்கு இல்லை.! நண்பரை, டிரம்ப் அழைக்காதது ஏன்?
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
அண்ணா பல்கலை துணை மின் நிலையம்: லட்சுமி நகர், டன்சா, நகர், நவாவூர் பிரிவு, கல்பனா நகர்,கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, IOB காலனி, அண்ணா பல்கலைக்கழக வளாகம், மருதமலை கோவில் சுற்றுப்பகுதிகள், டாடா நகர், அண்ணா நகர், சுப்ரமணியம் நகர் , பொம்மனம்பாளையம், குறியா கார்டன், கோல்டன் நகர், மருதநகர், சின்மயா நகர், இந்திரா நகர் மற்றும் ஜி.கே.எஸ் அவென்யூ.
குனியமுத்தூர் துணை மின் நிலையம்: குனியமுத்தூர், பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம்,புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி) மற்றும் சுண்டக்காமுத்தூர் (ஒரு பகுதி).
கீரணத்தம் துணை மின் நிலையம்: கீரணத்தம் சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி (ஒரு பகுதி), சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, விநாயகபுரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர்,விளாங்குறிச்சி ரோடு, வரதையம்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி (ஒரு பகுதி).
ஒத்தக்கால்மண்டபம் துணை மின்நிலையம்: தேகானி, மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் (ஒரு பகுதி), ஒத்தக்கால்மண்டபம், பிரீமியா் நகா், செட்டிபாளையம், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி மற்றும் ஓராட்டுக்குப்பை .
Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?