கோயம்பத்தூரில், நாளை ஜனவரி 18 ஆம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம்.
மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும்.
Also Read: TN Rain: தமிழ்நாட்டை துரத்தும் கனமழை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை புது அப்டேட்.!
கோவயில் நாளை மின்தடை: 18-01-2025
இந்நிலையில், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: வெடித்த எலான் மஸ்க் ஸ்டார்சிப் ராக்கெட்: நெருப்பு மழையாக மாறிய வானம்: கூலாக பதிலளித்த மஸ்க்.!
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா. சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர், காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், மேற்குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், முன்னெச்சரிக்கையாக, நாளை மின்சாரம் மூலம் செய்யக்கூடிய முக்கிய வேலைகளை காலை 9 மணிக்குள் செய்து முடித்துக் கொள்ளுங்கள்.