பிரமாண்டமாக காட்சியளிக்கும் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் ஏராளமான நபர்கள் இந்த பலூன் திருவிழாவை காண முடியும்.
தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா 2025 | Tamil Nadu Balloon Festival 2025
பலூன் என்றால் எந்த குழந்தைக்கு தான் பிடிக்காது. வண்ணங்களை ரசிக்க வைக்கும் பலூன்கள் ராட்சித அளவில் இருக்கும் போது, சிறு வயது குழந்தைகள் மட்டும் அல்ல ஓய்வு பெற்ற மூத்த வயதினரையும் ரசிக்கவைக்கும். அப்படி தான் சர்வ தேச பலூன் திருவிழா தமிழகத்தில் மூன்று இடங்களில் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும். இந்த ஆண்டை சேர்த்து 10-வது ஆண்டாக பலூன் திருவிழா நடத்தப்படவுள்ளது. அந்த வகையில் இந்தாண்டு சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று இடங்களில் இந்த திருவிழா நடைபெற உள்ளது.
எந்த இடங்களில் எப்போது பலூன் திருவிழா நடைபெறுகிறது
சிங்கார சென்னையில் கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளா திருவிடந்தையில் வருகிற 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆச்சிபட்டியில் 14- ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. அதே போல் மதுரையில் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் 18 மற்றும் 19-ஆம் தேதியில் இந்த பலூன் திருவிழாவானது நடைபெற உள்ளது.
மதுரையில் நடைபெறும் பலூன் திருவிழா
மதுரையில் நடைபெற உள்ள பலூன் திருவிழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. பெரிய அளவில் நடைபெறக்கூடிய பலூன் திருவிழா, இது தான் முதல் முறையாகும். பிரமாண்டமாக காட்சியளிக்கும் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் ஏராளமான நபர்கள் இந்த பலூன் திருவிழாவை காண முடியும். இதனால் மதுரை மக்கள் பலரும் இந்த பலூன் திருவிழாவிற்காக காத்திருக்கின்றனர். மதுரையில் ஜல்லிக்கட்டு முடிந்த கையோடு பலூன் திருவிழா ஆச்சிரியத்தையும், ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.