Breaking LIVE:தமிழக இளைஞர்கள் பாஜகவை நோக்கி வருகிறார்கள் - பாஜக தலைவர் ஜே.பி.நட்டா
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகி வருகிறது என்பதை கண் கூடப்பார்க்கிறேன் என பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
கோவையில் பாஜக அலுவகலம் மற்றும் பாஜகவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து, சட்டம் ஒழுங்கு குறித்து விசாரிக்க சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் ஆய்வு நடத்தவுள்ளார்.
வள்ளியூர் - நாங்குநேரி இடையே வரும் 26-ந் தேதி ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதால், இந்த அசம்பாவிதத்தில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான முதல் தாள் வரும் அக்டோபர் 14 முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய வழக்கில், திண்டுக்கல் கணவாய்ப்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது விசாரணை தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டது
பல மணி நேரமாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய பயனர்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் மீண்டும் இயங்க தொடங்கியது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்: ராஜஸ்தான் முதலமைச்சரும் மூத்த தலைவருமான அசோக் கெலாட் அறிவிப்பு
தமிழ்ப் பரப்புரை கழகத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர் 23ஆம் தேதி அரசு விரைவு பேருந்துகளில் சொந்த ஊர் செல்ல திட்டமுட்டுள்ளவர்கள் இன்று முன்பதிவு செய்யலாம்.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர் 23ஆம் தேதி அரசு விரைவு பேருந்துகளில் சொந்த ஊர் செல்ல திட்டமுட்டுள்ளவர்கள் இன்று முன்பதிவு செய்யலாம்.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி இந்த மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அக்டோபர் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அக்டோபர் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே தலைவர் யார் என அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கோயம்புத்தூர் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.
இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை
அரசு உணர வேண்டும்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்
குஜராத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களின் தேசிய மாநாட்டை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் செயலி நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரம் முடங்கியதால் பயனாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து 2 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி உரைகளின் தொகுப்பு நூலை டெல்லியில் இன்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிடுகிறார்.
தாய்லாந்தில் ஐடி வேலை வாய்ப்புகளைப் பெறும் முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்றுக் கொண்டார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில் டி.ராஜா பொறுப்பேற்றார்.
அதிமுகவை பிளவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாகவும் அரசியல் பார்க்காமல் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்குமாறும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
துறைமுகங்கள் வரைவு மசோதாவில் மாற்றங்கள் செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ள பிரிவுகளை நீக்கவும் கடிதத்தில் கோரியுள்ளார்
Background
கோவை காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதூர் பகுதியில் பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பாஜக நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் தினசரி வந்து செல்வது வழக்கம். பாதுகாப்பு காரணங்களுக்காக 24 மணி நேரமும் பாஜக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பாஜக அலுவலகத்தை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு பாஜக அலுவலகத்திற்கு அருகே விழுந்தது. அதேசமயம் பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசாம்பாவிதங்கள் மற்றும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாஜகவினர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த காட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். வெடிக்காத பெட்ரோல் குண்டு மற்றும் பாஜக அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் விகேகே மேனன் சாலையில் செல்லும் ஒரு இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு பாஜக அலுவலகத்திற்கு அருகே விழும் காட்சிகளும், பாஜக தொண்டர்களும், காவல் துறையினரும் அடுத்தடுத்து பதட்டத்துடன் வந்து பார்க்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இக்காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பாஜக அலுவலகம் முன்பு அக்கட்சி தொண்டர்கள் குவிந்தனர். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கண்டித்தும், அச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒப்பணக்கார வீதியில் வட மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான மாருதி என்ற துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் கடையின் முன்பாக இருந்த அட்டை மீது விழுந்து தீப்பற்றியுள்ளது. கடையில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கடை வீதி காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டார்களா அல்லது வேறு வேறு நபர்களா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். .
.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -