சென்னையில் கடந்த மாதம் பெய்த இடைவிடாத கனமழை காரணமாக கூவம் ஆறு நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த அரிதான காட்சியை சென்னை மக்கள் இப்படிப்பட்ட காலத்தில் தான் காண முடியும். ஒரு காலத்தில் கங்கை போல் புண்ணிய நதியாக இருந்த சென்னையின் கூவம் இன்று நாற்றமடிக்கும் சாக்கடையாக மாறிவிட்டது. 


இன்றளவும் இந்த ஆற்றின் ஓரத்தில் மக்கள் கொசு கடியிலும், நாற்றத்திலும் வாழ்ந்து வருகின்றனர். கூவம் ஆற்றில் பிந்தைய வரலாறு எப்படிப்பட்ட மகத்துவம் பெற்றிருந்தாலும் தற்போது இதன் பெயர் சொன்னால் சாக்கடை ஓடை என்றே எண்ணுகிறோம். 




இந்தநிலையில், நேற்று சென்னை சிந்தாதரிபேட்டை அருகே உள்ள பாலத்தின் மீது ஏறி நின்று மிக நீண்ட நேரமாக தனிமையில் பேசியுள்ளார். தீடிரென அந்த நபர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கூவம் ஆற்றில் குதித்துள்ளார். அந்த வழியாக சென்ற வடமாநில இளைஞர் இவரின் செயலை கண்டு முதலில் அதிர்ச்சியடைந்து அதன் பின்னர் கூவம் ஆற்றில் இறங்கி போதை ஆசாமியை இழுத்து கரைக்கு அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து அருகில் உள்ள எழும்பூர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க : ‛ஹோண்டா கார் எண்ட்ரி... வழிநெடுக நன்றி... ஒரே நாளில் ஆல் பேமஸ் கண்ட்ரி’ ஆவடி அன்னபூரணி... அம்மா ஆன கதை!


தவலறிந்து வந்த காவல்துறையினர் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து, அவருக்கு முதலுதவி கொடுத்து சிகிச்சையாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த போதை ஆசாமியின் பெயர் காளி என்றும், சிந்தாதரிபேட்டை பேட்டையில் வசித்து வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. 


ஏற்கனவே, கூவம் சாக்கடையாக மாறிப்போனதால் அதில் இறங்கினால் உயிருக்கு ஆபத்து என்று அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், போதையில் கூவம் ஆற்றில் குதித்த நபரால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


‛தாமரையிடம் பிக்பாஸ் போகாதே என்றேன்...’ -தாமரைச்செல்வி கணவர் சாரதி திக் பேட்டி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


கோயில் கடைகள் ஏலத்தில் அரசியல் தலையீடு: அழுது கொண்டே வெளியேறி பெண் அதிகாரி!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண