1. ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என்று நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

2. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடலில் நேற்று குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி சென்னை மாதவரத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியின் மனைவி  திவ்யா மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.

 

3. சென்னை, திரிசூலத்தைச் சேர்ந்த லியோன்சிங்ராஜா உள்ளிட்ட 10 பேர், சென்னையிலிருந்து இரண்டு காரில், அச்சிறுப்பாக்கம் மாதா கோவிலுக்கு நேற்று சென்றனர். செங்கல்பட்டு பாலாற்று பாலத்தை கடந்த போது, ஆற்றில் தண்ணீர் செல்வதை பார்த்து, ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது, லியோன்சிங்ராஜா, 38, அவரது மகள் பெர்ஷி, 13, மற்றும் சேகர் மகன் டெனிங்ஷடன், 19, ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். செங்கல்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், ஆற்றில் இறங்கி மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

4. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, சிட்லபாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம் பகுதி மக்களுக்கான குறைதீர் முகாம் நேற்று நடந்தது.

 

5. நாவலர் இரா.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அரசு சார்பில் சென்னை சேப்பாக்கம் புதிய அரசுவிருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திறந்து வைக்கிறார்.

 

6. திருத்தணி செருக்கனூரில் சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட 1.5 டன் செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரக்கு ஆட்டோவில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட 3 போரையும்`பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

7. வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர் .

வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதி அதிகாலை 4:17 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது . அது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. அந்த நில அதிர்வு வேலூருக்கு தெற்கு - தென்மேற்கில் 59.4 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும், 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அரசு தெரிவித்தது.

 

8. கடலுார் தேவனாம்பட்டிணம் கடற்கரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி மக்கள் குவிந்தனர்.

 

9. தை அமாவாசையை முன்னிட்டு கொல்கத்தா, காமாக்யா, காசிஉள்ளிட்ட இடங்களை தரிசித்து,கயாவில் தர்ப்பணம் செய்யும் வகையில் சிறப்பு ரயில் சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது

 

10. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர்கள் உட்பட 39 பேருக்கு, ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.