சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு சாலை கட்டமைப்பு பணிகள், குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் சில பகுதிகளில் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ எதிர்வரும் பருவமழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால், வால்டாக்ஸ் சாலை முதல் யானைகவுனி பாலம் அருகில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணி நடைபெறும் இடத்தில் ஏற்கனவே உள்ள குடிநீரை கொண்டு செல்லும் பிரதான குழாய்கள் சென்னை குடிநீர் வாரியத்தால் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. எனவே, பகுதி 5-ல் வருகிறது 27-ந் தேதி மற்றும் காலை 9 மணி முதல் மறுநாள் 28-ந் தேதி காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
குடிநீர் நிறுத்தப்படும் பகுதிகள்:
எழும்பூர், பார்க் டவுன், புரசைவாக்கம், ஜார்ஜ் டவுன், சிந்தாதிரிப்பேட்டை, சௌகார்பேட்டை, திருவல்லிக்கேணி,வேப்பேரி, சூளை ஆகிய பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க : SA vs WI, Match Highlights: வெஸ்ட் இண்டீஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது தென்னாப்பிரிக்கா..
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டியளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீரைப் பெற்றுக்கொள்ள பகுதிப் பொறியாளர்-5 (ராயபுரம்) 8144930905 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்தது. இதனால் வடசென்னையின் குடிநீர் விநியோகம் சிக்கலின்றி நடைபெற்று வருகிறது. இருப்பினும் பராமரிப்பு பணிகளுக்காக குடிநீர் விநியோகம் ஒருநாள் முழுவதும் தடைசெய்யப்படுவது அப்பகுதி மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில வாரங்களாக முக்கிய பகுதிகள் மற்றும் நகரின் உள்புற பகுதிகளிலும் சாலை பராமரிப்பு, குடிநீர் குழாய்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Irai Anbu Statement: அது அலுவல்ரீதியான கடிதம்தான்.. அரசியலாக்காதீர்கள் - இறையன்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்