நாடு முழுவதும் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளிலும், ஆலயங்களுக்கு சென்றும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியை இந்து அமைப்புகளும் கொண்டாடுவது வழக்கம்.
சென்னையில் விநாயகர் சதுர்த்திக்காக விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு கடலில் கரைக்கப்படுவது வழக்கம் ஆகும். இந்து அமைப்புகளின் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் கடலில் கரைக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் விநாயகர் சதுர்த்தியை பிரம்மாண்டமாக கொண்டாட இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் 5 ஆயிரம் சிலைகள் வைக்க இந்து முன்னணி இயக்கம் முடிவு செய்துள்ளது. கற்பக விநாயகர், ஜல்லிக்கட்ட விநாயகர, அழகர் விநாயகர் என 5 ஆயிரத்து 500 சிலைகளை வைக்க இந்து முன்னணி இயக்கம் தயாராக உள்ளது. சென்னை முழுவதும் வைப்பதற்காக இந்த சிலைகள் அனைத்தும் கடலூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து சிலைகள் இறக்குமதி செய்யப்ட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் எர்ணாவூரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பெரியளவில் நடத்தப்படவில்லை. நடப்பாண்டிற்கான விநாயகர் சதுர்த்தியை சென்னையில் சிறப்பாக நடத்த இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இந்து முன்னணி அமைப்புகள் சார்பில் சென்னை முழுவதும் வைக்கப்பட உள்ள 5 ஆயிரம் சிலைகளும் சுமார் ஒரு வார காலத்திற்கு மக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ள இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகரன் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பொதுமக்களின் வழிபாட்டிற்கு பிறகு அடுத்த மாதம் 4-ந் தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார். சென்னையில் விருகம்பாக்கம், அமைந்தகரை, வடபழனி, கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், கோடம்பாக்கம், அண்ணாசாலை, வியாசர்பாடி, ராயபுரம், ராயப்பேட்டை, காசிமேடு, யானைகவுனி ஆகிய பகுதிகளிலும் ஏராளமான சிலைகளை வைக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க : வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி... பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சி விற்பனை தொடக்கம்..!
மேலும் படிக்க : Sundal Recipe: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சுண்டல்... செய்வது எப்படி?