பிள்ளையார் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டைக்கு அடுத்து நம் நினைவுக்கு வருவது சுண்டல்.
மோதகப் பிரியன் எனக் கொண்டாடப்படும் பிள்ளையாருக்கு கொழுக்கட்டையுடன் சுண்டலும் விநாயகர் சதுர்த்தியன்று கொண்டாடப்படுகிறது.
கொண்டைக்கடலை சுண்டல், எல்லாப் பயிறுகளும் கலந்த நவரத்தின சுண்டல் ஆகியவை விநாயகர் சதுர்த்தி சிறப்பாக படைக்கப்படுகின்றன.
வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் பிள்ளையாருக்கு படைப்பதற்கு சுண்டல் எப்படி செய்வது எனத் தெரிந்துகொள்வோம்.
கொண்டைக்கடலை சுண்டல்
தேவையான பொருள்கள்
கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
தாளிக்க காய்ந்த மிளகாய்-2,
கடுகு, உளுந்து,
கறிவேப்பிலை, எண்ணெய்,
செய்முறை
கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் நன்றாகக் கழுவி, உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து, வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு வேக வைத்த கடலையையும் சேர்த்துக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிரட்டி, கடைசியாக சர்க்கரை தூவி இறக்கவும். வித்தியாசமான இனிப்புச் சுவையுடன் இருக்கும் இந்தச் சுண்டல்.
நவரத்தின சுண்டல்
தேவையான பொருட்கள்
மொச்சை, காராமணி, பச்சைப் பட்டாணி, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, சிவப்பு ராஜ்மா - தலா 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
தேங்காய்த் துருவல்தேவைக்கேற்ப
மாங்காய்த் துருவல் தேவைக்கேற்ப
கறிவேப்பிலை தேவைக்கேற்ப
கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
பயறுகளை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும்.
இதில் வேகவைத்த சுண்டலைச் சேர்த்துக் கலந்து, தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். இந்தக் கதம்ப சுண்டல் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டெம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டெம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பொதுவாக விநாயகர் அவதரித்த திதி அல்லது பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் அவதரித்த திதியே விநாயகர் சதுர்த்தி என கொண்டாடப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.