சென்னை போரூரை அடுத்த அய்யப்பன் தாங்கலை சேர்ந்த சமூக ஆர்வலரும் திருநங்கையுமான ஜெஸ்ஸி அரோரா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று யூடியூபர் பாரிசாலன் மீது புகார் ஒன்றை அளித்தார்.


இதையும் படிக்க: Ajith Watch Video: பின்னால வந்தத கவனிக்கல..! பெண்ணிடம் சாரி கேட்ட அஜித்! சூப்பர் மார்கெட் சிசிடிவி வீடியோ!


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருநங்கை ஜெஸ்ஸி அரோரா, கடந்த வாரம்  LGBTQ மக்கள் சுயமரியாதை பேரணி ஒன்றை நடத்தியதாகவும், அந்த பேரணியை திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கி வைத்ததாகவும் தெரிவித்தார்.  


இந்த பேரணியை தவறாக புரிந்துகொண்ட பாரிசாலன் என்பவர் செங்கோல் யூடியூப் சேனலில் LGBTQ மக்களை மிகவும் கொச்சையாக பேசியிருப்பதாக தெரிவித்தார்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க: RRR Story : `அது ஒரு Gay காதல் கதை!’ - ஆர்.ஆர்.ஆர் படத்தைப் பற்றிப்பேசிய ஆஸ்கர் வெற்றியாளர்.. சீறும் ரசிகர்கள்!


மேலும்  LGBTQ மக்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், சமுதாயத்துடன் சார்ந்து வாழ முடியாது எனவும் தனி மனித உரிமையை பறிக்கும் வகையில் பாரிசாலன் பேசியிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.


மேலும் அரசு தங்களுக்கு பல உரிமைகள் வழங்கி இருப்பதை சலுகைகள் என கொச்சைப்படுத்தி இருப்பதாக அவர் கூறினார். இதனால் LGBTQ மக்களை அவதூறாக பேசிய யூடியூபர் பாரிசாலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார். 


Lgbtq மக்களுக்கு உதவி புரியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களை சக மனிதனாக பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


பாரி சாலன், இப்படி சர்ச்சைக்குரிய விதமாக பேசுவது இது முதல்முறை அல்ல. பல விவகாரங்களில், பல சர்ச்சை கருத்துகளை பேசி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க: Nayanthara Luxury Home: லேடி சூப்பர் ஸ்டாரின் போயஸ் வீடு.. தியேட்டர் முதல் ஜிம் வரை.. நயன் வீட்டு இண்டீரியர் இத்தனை கோடியில்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண