தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜீத். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் இவர் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார். பைக் ரேஸர், ட்ரோன் தயாரிப்பாளர், துப்பாக்கிச் சுடும் வீரர் என்று பன்முகங்களை கொண்ட அஜீத் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.


அஜீத்தை முன்பெல்லாம் பொது இடங்களிலோ, வெளி நிகழ்விகளிலோ பார்ப்பது என்பது அரிதிலும் அரிதாகவே காணப்படும். ஆனால், வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜீத்தின் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பி.எம்.டபுள்யூ பைக்கில் வலம் வரும் அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது.


இந்த நிலையில் அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. லண்டனில் அந்த வீடியோ எடுக்கப்பட்டதாக பலரும் ஷேர் செய்து வருகின்றனர். சூப்பர் மார்க்கெட்டுக்குள் செல்லும் அஜித் தன்னுடிய கார்டை கொடுத்து பணம் செலுத்துகிறார். அஜித்தை அடையாளம் காணும் அந்தக்கடை கேஷியர் அஜித்துக்கு கைகொடுத்து நலம் விசாரிக்கிறார். பின்னர் அஜித் திருப்பி நடக்கபார்க்கிறார். அப்போது எதிரே வந்த பெண்ணுக்கு இடைஞ்சலாக இருந்துவிட்டதாக நினைத்து சாரி கேட்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 






முன்னதாக, பைக் ரேஸர் உடையிலும், ஐரோப்பிய நாடுகளில் டிசர்ட்டிலும் அஜீத் மெலிந்த தோற்றத்தில் இருந்த புகைப்படங்கள் வெளியாகி அஜீத் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அடுத்தடுத்து அஜீத்தின் புகைப்படங்கள் வெளியாகி வருவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அஜீத் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் துப்பாக்கிச்சுடுதல், ட்ரோன் தயாரிப்பு, பைக் ரேஸ் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 


அதேசமயத்தில் ஏகே 62 திரைப்படத்திற்கான அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா? என்றும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில் நடித்த பிறகு அஜீத்குமார் இயக்குனர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ள திரைப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அதேசமயம் இந்த திரைப்படம் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட உள்ளதாக மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளது.