செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்மேடு அருகே உள்ள சின்ன களக்காடி பகுதியை சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் அலமேலு, இவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் ராஜேந்திரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். ராஜேந்திரன் சென்னையில் ரிக்க்ஷா ஓட்டுநர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் மூத்த மகன் மற்றும் இளைய மகள் கஸ்தூரி ஆகியோர் உள்ளனர்.



 

இந்நிலையில் அலமேலு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பால் அலமேலு உயிரிழந்துள்ளார்.  இதனையடுத்து ராஜேந்திரன் ரிக்க்ஷா ஒட்டி அதன் மூலம் வரும் வருமானத்தை தன்னுடைய குழந்தைகளை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் குழந்தைகள் தாய் தந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இதனையடுத்து , சிறுவர்கள் இருவரும் சூனாம்மேடு அருகே  உள்ள தன்னுடைய தாத்தா பாட்டி வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். சமீபத்தில் இவர்களுடைய தாத்தாவும் உயிரிழந்துள்ளார் . தற்போது ராணி தன்னுடைய பேரக் குழந்தைகளை வளர்த்து வருகிறார்.



 

தற்போது குடிசை வீட்டில் இவர்கள் வசித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அவர்களுடைய குடிசை வீடு இடிந்து விழுந்துள்ளது.  இதன் காரணமாக செய்வது அறியாமல் குடும்பம் தற்போது தவித்து வருகிறது. தற்பொழுது மூத்த மகன்  விடுதியில் தங்கி தொழிற்கல்வி படித்து வருகிறார். கஸ்தூரி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வீடு இடிந்து இருப்பதாலும் பாதுகாப்பிற்கு பாட்டியைத் தவிர வேறு யாரும் இல்லாத காரணத்தினாலும் தற்போது குழந்தைகள் இருவரும் பரிதவித்து வருகின்றனர்.

 



 

தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இடிந்துபோய் உள்ள வீட்டில் எவ்வாறு வாழ்வது என்று தெரியாமல், நிர்க்கதியாக தவித்து வருகின்றனர்.  படிப்புச் செலவிற்கும் பணம் இல்லாமல் தொடர்ந்து படிப்பைத் தொடர முடியாமல் போய்விடுமோ என அச்சத்தில் உள்ளார் கஸ்தூரி. தமிழக அரசு உடனடியாக ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து ராணி கூறுகையில், தனக்கு உடல்நிலை சரியில்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு  வருவதாகவும், குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகிறேன் இந்த நிலையில் தற்போது பிரிந்து இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது உடனடியாக ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். மாணவி கஸ்தூரி கூறுகையில், படிப்பதற்கு கூட தேவையான பொருட்கள் வாங்க பணம் இல்லாமல் தவித்து வருகிறோம் அரசு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...