ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வல்லக்கோட்டை ஜங்ஷனில் பழுதடைந்து நின்ற கண்டெய்னர் லாரியை டிராபிக் போலீஸ் தன்னுடைய திறமையால் ஓடிச்சென்று போக்குவரத்து நெரிசலை சரி செய்தது ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் பாராட்டுதலைப் பெற்றது, மேலும் சமூக வலைத்தளத்தில் காவலரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.





காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வல்லக்கோட்டை சாலை சந்திப்பில்,  இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள பிரபல கார் தொழிற்சாலையில் இருந்து கார்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி திடீரென நடுரோட்டில் நின்று விட்டது இதனால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தனது கனரக வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை உணர்ந்த ஓட்டுநர் , பழுதடைந்த கண்டெய்னர்  லாரியை நடு ரோட்டிலேயே நிறுத்தி விட்டு சென்று விட்டார்.



இருப்பினும் அங்கு பணியிலிருந்த போக்குவரத்து காவலர் சரத் தன்னுடைய தனித் திறமையால் கண்டெய்னர் லாரியை ஓட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டு வாகனங்கள் சீராக சென்றது. மேலும் காலை நேரத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தாம்பரம் சாலையில் அதிக வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வழக்கம்.

 



இந்நிலையில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்து காவலர் சரத் திறமையாக செயல்பட்டு கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தியதை பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து காவலர் சரத்தை வெகுவாக பாராட்டினர். போக்குவரத்துக் காவலரின் இந்த செயல் தற்பொழுது வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Ilaiyaraja Controversies: 80-வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா! இதுவரை கடந்துவந்த சர்ச்சைகள்!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண