தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த முறை காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறைக்கென முதல் முறையாக தனி நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதனை அத்துறைக்கான அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.


சிங்கார சென்னை திட்டம்: தற்போதைய சென்னையை பசுமை சென்னையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சுவரொட்டிகள் இல்லா நகரமாகவும் மாற்றப்படும் இதற்காக சிங்காரச் சென்னை 2.0 தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 


மேலும், சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த ரூ. 150 கோடி அமைக்கப்படும்,    சென்னையில் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். சென்னையில் 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக ரூ.2,056 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.   




கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.  


சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி விரைவாக தொடங்கப்படும். கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை – ஸ்ட்ரான்ஸ் சாலை, தியாகராய நகரில் உள்ள தெற்கு உஸ்மான் சாலையில் ரூ. 335 கோடி மதிப்பில் பாலங்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். 


சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி விரைவாக தொடங்கப்படும். கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை – ஸ்ட்ரான்ஸ் சாலை, தியாகராய நகரில் உள்ள தெற்கு உஸ்மான் சாலையில் ரூ. 335 கோடி மதிப்பில் பாலங்கள் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.   


பட்ஜெட் கூட்டத்தொடர்: பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16-ஆம் தேதி முதல் தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அதன்பிறகு மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் 21-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதிவரை நடைபெறும் என்று ஏற்கனவே தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்திருந்தார்.


மேலும், வாசிக்க: 


TN Budget Highlights: பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 


TN Budget 2021: நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும் - பி.டி.ஆர்