சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்பட தயாரிப்பாளர் மற்றும் யானை பராமரிப்பு தம்பதி பொம்மன் - பெள்ளி  தம்பதி உள்ளிட்ட படகுழுவினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெற உள்ளது. 


தி எலிபெண்ட் விஸ்பரஸ் ஆவணப்படம் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது. இவை நாடு முழுவதும் முக்கிய தலைவர்கள் மற்றும் பொது மக்களால் பெரிதும் பாரட்டப்பட்டது.


இந்நிலையில் நேற்று நடந்த ஒரு நிகழ்வில் தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் குழுவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கெளரவித்தது. அப்போது அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பொம்மன் பெள்ளி தம்பதிக்கு அவர்களின் பெயர் பொரிக்கப்பட்ட  சிஎஸ்கே ஜெர்சிகளை  அந்த படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்  முன்னிலையில் பரிசாக வழங்கினார். 


மேலும் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்பட தயாரிப்பாளர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் யானை பராமரிப்பாளர்களான பொம்மன் -பெள்ளி தம்பதி உள்ளிட்ட குழுவினருக்கு ஸ்டேடியத்தில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற உள்ளது.


முன்னதாக சிறந்த ஆவணப்பட பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது. அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.  இதில் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது.  இப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது.


நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணியாற்றி  வருகின்றனர். 2017-ஆம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில், தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது. பொம்மனும் பெல்லியும் இந்த யானையை  முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து, ரகு என பெயர் வைத்து பராமரித்து வருகின்றனர்.


தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளை பராமரிக்கும் பழங்குடியினத் தம்பதியின் கதையை,  உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திக் கொன்சால்வ்ஸ் ஆவணப்படமாக்கி இருக்கிறார்.  


மேலும் படிக்க 


The Kerala Story: எதிர்ப்புகளைக் கடந்து 5 நாள்களில் வசூலை வாரிக்குவித்த தி கேரளா ஸ்டோரி! எவ்வளவு தெரியுமா?