தென் மண்டல விலங்கு பராமரிப்பாளர்களுக்கான மூன்று நாள் திறன் வளர்ப்பு பயிற்சி கருத்தரங்கம், “உயிரியல் பூங்காவில் வன விலங்குகள் மேலாண்மை” என்ற தலைப்பில் சென்னை, வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 09.03.2022 அன்று தொடங்கப்பட்டது.




புது தில்லியில் உள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சித் திட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 11 உயிரியல் பூங்காக்களைச் சேர்ந்த விலங்குக்காப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.




   
இந்த பயிற்சி கருத்தரங்கின் நோக்கமாக, உயிரியல் பூங்கா பராமரிப்பாளர்களுக்கு, விலங்குகள் பராமரிப்புத்திறன் மற்றும் மேலாண்மை, சுற்றுச்சூழல் செறிவூட்டல் மற்றும் ஆளுமை மேம்பாடு ஆகியவற்றை வழங்குவதாகும். இந்த கருத்தரங்கில் விலங்கு பராமரிப்பாளர்களுக்கு, உயிரியல் பூங்காவில் அடிப்படை சுகாதார நெறிமுறைகள், வன உயிரினங்களின் பராமரிப்பு மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், விலங்குகளை கையாளுதல், கட்டுப்பாடு மற்றும் நடத்தையினை கண்காணித்தலில் நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகள், அவசரநிலைகள் மற்றும் நெறிமுறைகளின்  விலங்கு பராமரிப்பாளர்களின் பரந்த பார்வை, விலங்கு மேலாண்மையில் அடிப்படை உயிரியல், வன உயிரின வளர்ப்பு மற்றும் செறிவூட்டுவதற்கான கருவிகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் தேர்ச்சிப்பெற்ற கள வல்லுநர்களால் பயிற்சியும் மற்றும் சுற்றுச்சூழல் செறிவூட்டல் தொடர்பான கள பயிற்சியும் வழங்கப்படுகிறது.




 


வண்டலூர் பூங்கா


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Rahul Gandhi on Petrol Diesel Price Hike : லிட்டருக்கு ரூ.12 வரை உயரும் பெட்ரோல், டீசல் விலை?



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர