கணவர் இறந்த 7 மாதத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகமான போலீஸ் இளைஞரால் தான் கர்ப்பமடைந்ததாக பெண் ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு நியாயம் கேட்டு அவர் பல காவல்நிலையம் அலைந்த கதை முடிவுக்கும் வந்துள்ளது. 


கணவர் பலி.. 


சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சோபனா (28). இவருக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் சோபனாவின் கணவர் விக்னேஷ் சாலை விபத்தில் இறந்துள்ளார். கணவர் இறந்ததால் வருத்தத்தில் இருந்த சோபானா, பின்னர் பேஸ்புக்கில் மூழ்கியுள்ளார். சில நாட்களிலேயே பேஸ்புக்கில் அவருக்கு காவலர் விக்னேஷ்வரன்என்பவர் அறிமுகமாகியுள்ளர். சோபனாவை காதல் வலையில் வீழ்த்திய விக்னேஷ்வரன் அவரை அழைத்துக்கொண்டு ஊர் முழுவதும் சுற்றியுள்ளார். தனிமையில் இருந்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்துள்ளார் சோபனா. ஆனால் கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் திருமணம் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார். வீட்டிலேயே தாலியைக் கட்டி திருமணம் முடிந்துவிட்டது கருவைக் கலைக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இதனை நம்பி சோபனா கருவைக் கலைத்ததும் எஸ்கேப் ஆகியுள்ளார் விக்னேஷ்வரன்.




தொடர் புகார்கள்...


தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்ட சோபனா, 2020ம் ஆண்டு கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் செங்கல்பட்டு மகளிர் காவல்நிலையத்தில் மீண்டும் புகாரளித்துள்ளார் சோபனா. அப்போது விசாரணைக்கு ஆஜரான விக்னேஷ்வர் சேர்ந்து வாழ்வதாக குறிப்பிட்டு எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் மறுபடி எஸ்கேப் ஆகியுள்ளார். அதனைத் தொடர்ந்து புழல், மாதவரம் என அனைத்து காவல் நிலையங்களிலும் நியாயம் தேடியுள்ளார். எங்குமே நியாயம் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று தாம்பரம் கூடுதல் துணை ஆணையரிடம் புகாரளித்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் விக்னேஷ்வரன் கைது செய்யப்பட்டார்.


ஏற்கெனவே வழக்கு..


கைதான விக்னேஷ்வரன் மீது ஏற்கெனவே ஒரு பெண்ணை ஏமாற்றிய வழக்கும் இருந்துள்ளது. 2016ம் ஆண்டு திருமணமான பெண் ஒருவரை ஏமாற்றியுள்ளார் அவர். அதேபோல சோபனாவும் முதல் கணவரான விக்னேஷால் ஏமாற்றப்பட்டுள்ளார். அது வழக்காகி பின்னர் பெண் குழந்தை பிறந்த பின்னரே விக்னேஷுடன் சேர்ந்து வாழத்தொடங்கியுள்ளார். அந்த நேரத்தில்தான் விபத்தில் அவர் இறந்துள்ளார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண