தமிழ்நாட்டின் தலைநகரமாக உள்ள சென்னை எப்பொழுதுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கருதப்படுகிறது.


சென்னை:


ஏனென்றால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.21 கோடியாக உள்ளது. அதில் அதிகமாக சென்னை மாவட்டத்தில் 46.81 லட்சம் பேர் வசிக்கின்றனர். அதிக மக்கள் தொகை மட்டுமன்றி, பெரும்பாலான அரசு அலுவலகங்களும் சென்னையில்தான் உள்ளது. மேலும் தொழில்துறையில் சிறந்து விளங்கும் மாவட்டமாக உள்ளதால், வேலைவாய்ப்பும் அதிகளவில் உள்ளது.


இதை கருத்தில் கொண்டே, சென்னைக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது என்றே சொல்லலாம். இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னையை மேம்படுத்த அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களை காணலாம்.


இலவச WIFI:


சென்னை, தாம்பரம், ஆவடி,கோவை,மதுரை, திருச்சி,சேலம் ஆகிய 7 மாநகராட்சிகளின் முக்கிய இடங்களில் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திறந்தவெளி திரையரங்கம்:


சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட திட்டங்கள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





கழிவறை:


சென்னையில் கழிவறை கட்டவும், மேம்படுத்தவும் ரூ. 430 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







அடையாறு ஆறு- பூங்கா:


அடையாறு ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோர பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம்:


சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.


வட சென்னை வளர்ச்சி திட்டம்:


வட சென்னை பகுதிகளை மேம்படுத்தும் வகையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மெட்ரோ திட்டம்:


பூந்தமல்லி – கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


நான்குவழி மேம்பாலம்:


ரூ.621 கோடி ரூபாயில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்குவழி மேம்பாலம் கட்டப்படும்.


நினைவிடம்:


மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.


Also Read: TN Budget 2023: தமிழ்நாட்டிற்கு எவ்வளவு வருவாய்? எவ்வளவு செலவு? எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா?


Also Read: TN Budget 2023 LIVE: வரும் நிதி ஆண்டில் ரூ.1.43 லட்சம் கோடி கடன் பெற அரசு திட்டம் என பட்ஜெட்டில் தெரிவிப்பு