தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


அடுத்த 2 மணி நேரம்:


சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, அடுத்த 2 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.


மேலும், வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் பகுதியில் உள்ள மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.






நாளை கோயம்புத்தூர். திருநெல்வேலி மாவட்டங்களில் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் முதல் 10-ஆம்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.


சென்னை நிலவரம்:


மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை 6 செ.மீட்டரும், ஓசூர், சூளகிரி, சின்னார் அணை பகுதியில் தலா 5 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக விழுப்புரத்தின் அவலூர்பேட்டை, நீலகிரியின் நடுவட்டம், விழுப்புரத்தின் வல்லம், கிருஷ்ணகிரியின் தேன்கனிக்கோட்டை, நீலகிரி கூடலூர் தலா 1 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


 மேலும் படிக்க:சாதிய வேறுபாடுகள் இல்லாத சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி கருத்துடன் ஒத்துப் போகிறேன் - எம்.பி கார்த்தி சிதம்பரம்


மேலும் படிக்க: சுடுகாட்டிற்கு பாதை வசதி வேண்டும்... பாடை கட்டி நூதன முறையில் பட்டியலின மக்கள் போராட்டம்