பெண்ணிடம் பெற்ற பணத்தை  திரும்ப அளிக்காத புகாரில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


சென்னையை சேர்ந்த பானுமதி என்பவர் கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.   இவர் வழக்கு ஒன்றுக்காக எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையம் சென்ற போது இவருக்கும், உதவி ஆய்வாளராக பணியாற்றிய வீரமணிக்கும் கடந்த 2010ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: AIADMK: அதிமுகவில் 4 குழு.. சட்டப்பேரவையில் அடுத்து என்ன நடக்கும்? - விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு!


இதனையடுத்து, மகளின் திருமண செலவுக்காக கடன் பெறுவதற்கு உத்தரவாதம் வேண்டும் எனக்கோரி பானுமதியிடம் வெற்றுத்தாள் மற்றும் வங்கி காசோலையில் கையெழுத்து பெற்று 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். மேலும் பானுமதியிடமிருந்து 13 சவரன் நகை மற்றும்  பத்து லட்சம் ரூபாய் பணமும் தனியாக வாங்கியுள்ளார். 


கடன் பெற்ற உதவி ஆய்வாளர் வீரமணி,  முறையாக திரும்ப செலுத்தாத நிலையில் பணத்தை திரும்ப அளிக்குமாறு பானுமதி, உதவி ஆய்வாளர் வீரமணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், தற்போது  பணம் இல்லை என கூறியுள்ளார். அத்துடன் பணத்தை திருப்பி கேட்டால் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுதாக  உதவி ஆய்வாளர் வீரமணி மிரட்டியுள்ளார்.


இந்நிலையில் அந்த பெண் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகாரளிக்க, அந்த புகார் தரமணி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பானுமதி தரமணி காவல் நிலையம் சென்று நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதற்கு பதிலளித்த தரமணி காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளர் தேவராஜ்,  நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் வேண்டுமானால் நீதிமன்றம் செல்லுமாறு கூறியுள்ளார். 


இதனையடுத்து மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணம் கோரி பானுமதி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தார். விசாரணையின் போது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மறுத்தனர். 


இந்த புகாரை விசாரித்த  மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி அவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக உள்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 


மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும், இந்த தொகையை உதவி ஆய்வாளர் வீரமணி மற்றும் ஆய்வாளர் தேவராஜிடம் வசூலிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க:Praggnanandhaa: யாரு சாமி இது? அடுத்தடுத்த வெற்றிகளால் அமெரிக்காவை அலற வைக்கும் பிரக்ஞானந்தா!




 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண