காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாமதி பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ், இவரது மகன் தேவண்ணா ( 43) இவரது மனைவி பிரேமா. தம்பதிகள் இருவருக்கும், ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை, இரவு ஏழு மணி அளவில்,  வயலூர் கூட்ரோட்டில் இருந்து, தனது இருசக்கர வாகனத்தில் மானாமதி நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது கார் மோதி தூக்கி எறியப்பட்டார்.

 




 

தேவண்ணாவின் தலை முழுவதும், பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு  அனுமதிக்கப்பட்டார்.  சுயநினைவு இல்லாமல் இருந்தவருக்கு   தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவருக்கு மூளை சாவு ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் அதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

 பரிசோதனைகள் மூலம் மூளை சாவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து உறவினர்கள் உறுப்பு தானம் செய்ய சம்மதம் அளித்தனர். இதனை அடுத்து மருத்துவர்கள் உடலில் இருந்து கல்லீரல் (Liver) இரண்டு  சிறுநீரகம் மற்றும், இரு கருவிழிகள் அகற்றபட்டு  தமிழ்நாடு உறுப்பு வங்கி  மூலம், மாற்று அறுவை சிகிச்சை தேவைபட்டவர்களுக்கு, வழங்கப்பட்டு உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டன. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இத்தகைய அறுவை சிகிச்சையானது முதல் முறையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 



 

இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் சேர்ந்த 42,வயதான ஆண் நபர் சுமார் 7.30மணி அளவில்  சாலையோர விபத்தில் அடிபட்டார். தனியார் மருத்துவமனையில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு கொண்டுவரப்பட்ட அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சுயநினைவு இல்லாமல் , இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும், எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லை.பரிசோதனைகள் மூலம் மூளை சாவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

 



மூளை சாவு அடைந்தது குறித்து உறவினர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது, உறவினர்கள் உறுப்பு தானம் செய்ய சம்மதம் அளித்தனர்.இதனை அடுத்து உடலில் இருந்து கல்லீரல் ( Liver), இரண்டு  சிறுநீரகம், மற்றும், இரு கருவிழிகள் அகற்றபட்டு TRANSTAN  மூலம். மாற்று அறுவை சிகிச்சை தேவைபட்டவர்களுக்கு வழங்கபட்டது.  இத்தகைய அறுவை சிகிச்சை செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல் முறையாக செய்யபட்டது.  தமிழக அரசு மற்றும்  TRANSTAN உறுப்பினர் செயலாளர்  , வழிகாட்டுதலின்படி  சிருநீரகவியல் துறைத் தலைவர் மருத்துவர் த. ஸ்ரீகலா பிரசாத் தலைமையில் நடைபெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.