செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 8ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அத்துடன் தனி நபர் பிரிவில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று இருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கமும், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கமும் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்று இருந்தனர். 


இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கு பிறகு பிரக்ஞானந்தா அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கப் செஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். இந்தத் தொடரில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், அணிஷ் கிரி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தத் தொடரின் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 4ஆம் இடத்திலுள்ள அலிரெசா ஃபிரொஸ்ஜாவை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா இரண்டு முறை ஒரு முறை டிரா செய்து மொத்தம் 2.5-1.5 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இந்தத் தொடரில் ஒரு வீரருடன் 4 போட்டிகள் நடைபெறும் அதில் அதிக புள்ளிகள் எடுக்கும் வீரர்கள் வெற்றி பெறுவார்கள். 


 






இதைத் தொடர்ந்து நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 9வது இடத்திலுள்ள நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டர் அணிஷ் கிரியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியிலும் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதிலும் பிரக்ஞானந்தா முதல் மற்றும் கடைசி போட்டியில் வெற்றியும், ஒரு டிராவும் செய்தார். இதன்காரணமாக அணிஷ் கிரியை 2.5-1.5 என்ற கணக்கில் தோற்கடித்தார். 


 






தொடர்ச்சியாக 2 போட்டிகளில் அசத்தி வரும் பிரக்ஞானந்தா தன்னைவிட தரவரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களை தோற்கடித்து சிறப்பாக விளையாடி வருகிறார். அடுத்து பிரக்ஞானந்தா லெவான் அர்னோனியனை எதிர்த்து விளையாட உள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண