சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ளது மாட்டாங்குப்பம். இந்த பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் வினோத் மற்றும் பாலாஜி. இவர்களது தாய்மாமன் ராஜா. இவர் திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோவில் 3வது தெருவில் வசித்து வருகிறார்.அவருக்கு வயது 49. ராஜா அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோ ஓட்டுனராக மட்டுமின்றி அவரது வீட்டின் அருகே சிறிய உணவகமும் நடத்தி வருகிறார்.


வினோத் மற்றும் பாலாஜி மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ராஜா மீதும் அடிதடி வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. வினோத் மற்றும் பாலாஜி இருவரும் சிறைக்கு சென்றால் அவர்கள் இருவரையும் ராஜாதான் ஜாமீனில் எடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக, வினோத், பாலாஜியின் விரோதிகளுக்கு ராஜா மீது பகை இருந்து வந்துள்ளது.





அதே நேரத்தில், ராஜா புதியதாக தொடங்கிய உணவகத்தை நடத்துவது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிலருக்கும், ராஜாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், திருவல்லிக்கேணி விக்டோரியா மருத்துவமனை அருகே உள்ள பாரதி சாலையில் உள்ள பிற்பகல் 2.50 மணியளவில் ராஜா நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே 6 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர்.


மேலும் படிக்க : Crime: திருடன் என எண்ணி அடித்துக் கொல்லப்பட்ட காய்கறி வியாபாரி... கும்பல் தாக்குதலால் உயிரிழந்த சோகம்!


இதைக்கண்ட அதிர்ச்சியடைந்த ராஜா உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடினார். ஆனால், அந்த கும்பலும் ராஜாவை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் ராஜா சரிந்து கிடப்பதை அறிந்த ராஜாவின் மனைவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது. ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.




இந்த சம்பவம் குறித்து ஜாம்பஜார் காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பிச்சென்ற 6 பேர் கொண்ட கொலை கும்பலை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தேடி வருகின்றனர். திருவல்லிக்கேணியில் பிரபல ரவுடிகளின் தாய்மாமனை மர்மகும்பல் பட்டப்பகலில் ஓட, ஓட வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.  


மேலும் படிக்க : Crime : உடலுறவுக்கு மறுப்பு.. எப்போதும் செல்போன்! மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!


மேலும் படிக்க : Chennai Bank Robbery : 'ஜென்டில்மேன் படத்தை 10 முறை பார்த்தேன்..' வங்கி கொள்ளையன் சொன்ன ஷாக் வாக்குமூலம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண