1. காஞ்சிபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளில் இடிந்து விழுந்ததால் இருளர் குடியிருப்பில் சிக்கி 8 வயது சிறுமி உயிரிழந்தார்.

 

2. காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதா் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை தொடக்கி வைத்து, மாணவா்களுக்கு சீருடை மற்றும் புத்தகப் பையை வழங்கினாா்.



3. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 75.73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் திருத்தம் மேற்கொள்ள வரும் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.தமிழகம் முழுதும், சட்டசபை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.

 

4. தமிழகத்தில் இன்று தொடர்ந்து பல இடங்களில் கனமழை பெய்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

5. 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ததை அடுத்து, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். 



6. சென்னையில் 160.50 கோடி ரூபாயில், வேளச்சேரியில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் மற்றும் கோயம்பேடு மேம்பாலத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

 

7. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மதுரைக் கோட்ட தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

 

8. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.



9. தீபாவளியை பொதுமக்கள் சொந்த ஊர்களில் கொண்டாட ஏதுவாக 16,540 பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.

 

10. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைஅமைதியாக நடத்த அலுவலர்களின் ஒத்துழைப்பு அவசியம். தேர்தலை நடத்தி முடிப்பதற்கான காலஅளவு குறைவாக உள்ளது. உச்ச நீதிமன்றம் 4 மாதங்கள் மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளதால், குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது, சவால்கள் நிறைந்தது என்று மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தெரிவித்துள்ளார்.