தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்வது வழக்கம். இதுபோன்று, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை மற்றும் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளியை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவைகள் நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும். இந்த மெட்ரோ ரெயில் நீட்டிப்பு சேவைகள் நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.




தமிழகத்தில் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து சொந்த ஊர் சென்று திரும்பும்போது, கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இம்முறையும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் பயணம் மேற்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளதாகவும், தீபாவளி பண்டிகைக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகையின் போது பயணம் செய்ய இதுவரை 72,597 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.




மேலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்க வழக்கமாக பண்டிகை நாட்களில் இயக்கப்படுவதைப் போல, சென்னையில் இருந்து வெளியூர் செல்ல கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம் பேருந்து நிலையம்- மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து வெவ்வேறு வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நாட்களில் சென்னையை பொருத்தவரை போக்குவரத்து நெறிசல் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் மக்கள் தங்களது குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய மெட்ரோ ரயிலை பயண்படுத்தும் விதமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக நாளை மற்றும் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக- மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தி  பயன்பெறுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.