சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் தங்ககக்கடத்தலைத் தடுப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடத்தல்காரர்கள் சரக்குப்பார்சல் மூலமாக தங்கத்தை கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மேலும், இந்த தங்கங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்டதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.


இதையடுத்து, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலைய சரக்குப்பிரிவில் சோதனை மேற்கொண்டனர்.  மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் சரக்கு விமானம் மூலம் வந்த சரக்கு பெட்டகங்களை மட்டும் தீவிரமாக கண்காணித்தனர்.




அதில், துபாயில் இருந்து செல்போன் உதிரிபாகங்கள் இருப்பதாக வந்திருந்த பார்சல் மீது மட்டும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அந்த பார்சலில் எழுதியிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், அந்த எண் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து, பார்சலில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரி குறித்தும் ஆய்வு செய்தனர். ஆனால், அந்த முகவரியும் போலியானது என்று விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து, சந்தேகத்திற்குரிய அந்த பார்சலை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அப்போது, அந்த பார்சல் முழுவதும் தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் எடை 12 கிலோ ஆகும். இதன் மொத்த மதிப்பு மட்டும் ரூபாய் 5 கோடி ஆகும். இதையடுத்து, இந்த தங்கக்கட்டிகளை புலனாய்வு போலீசார் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.




பயணிகள் மூலமாக நடத்தப்பட்டு வந்த தங்கக்கடத்தல் பார்சல் சேவை மூலமாகவும் நடைபெற்று வருவதை அடுத்து விமான நிலைய அதிகாரிகள் சோதனையை பலப்படுத்தியுள்ளனர். சர்வதேச அளவில் அதிகளவில் தங்கம் விமானங்கள் மூலமாக கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதுபோன்று விமானங்கள் மூலமாக தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதைத்தடுப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.


மேலும் படிக்க : கரூர் அருகே நெஞ்சுவலியால் ஓட்டுநர் மரணம் - கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் இறங்கியது


மேலும் படிக்க : Crime News: எப்போ பாரு செல்போன்..! பெற்ற மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - ஆந்திராவில் கொடுமை!


Union Budget 2022-23: மத்திய அரசு பட்ஜெட்.. தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண