ஆந்திராவில் அமைந்துள்ளது விசாகப்பட்டினம். இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார் 15 வயதான மாணவி. இவர் தனது தந்தை மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். இவரது தந்தைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கிட்னிகளும் செயலிழந்துவிட்டது. இதையடுத்து, அந்த மாணவியின் தாய் தனது ஒரு கிட்னியை தனது கணவருக்கு தானமாக அளித்தார். இதையடுத்து. தற்போது இருவரும் ஒரு கிட்னியுடன் தங்களது வேலைகளை செய்து வருகின்றனர்.


அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த மாணவியின் தாய், அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு சென்றுவருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதுபோன்ற நேரங்களில் தனது மகளை மட்டுமே வீட்டில் விட்டுச்சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த கொடூர தந்தை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.




கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நடைபெற்று வந்த கொடூர சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, பள்ளியிலும், வீட்டிலும் யாரிடம் சரியாக பேசாமலே இருந்துள்ளார். மேலும், பள்ளி முடிந்த பிறகு நீண்டநேரமாகியும் வீட்டிற்கு செல்லாமலே இருந்துள்ளார்,


மேலும் படிக்க : கைகட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்த படப்பை குணா..! அடுத்து என்ன செய்யப் போகிறது காவல்துறை...!


மேலும் படிக்க : மனைவியின் கள்ளக்காதலர்களால் மகன் உயிருக்கு ஆபத்து - தந்தை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு‌


இதைக்கண்ட பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவியிடம் வீட்டிற்கு செல்லாதது குறித்து கேட்டுள்ளார். அதற்கு மாணவி தனக்கு தனது தந்தையால் நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட ஆசிரியை அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், உடனடியாக காவல்நிலையத்தில் மாணவி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.




இதையடுத்து, உடனடியாக 42 வயதான மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். மாணவி நீண்டநேரமாக செல்போன் பயன்படுத்தி வந்ததால், ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை அதையே சாதகமாக்கி மாணவியை தொடர்ந்து மாதக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. பெற்ற தந்தையே 15 வயது மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண