சென்னையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரவுடி பிரதீப் , சகோதரர் சஞ்சய், கலைவாணன்,ஜோதி ஆகியோரை சேலம் எடப்பாடியில் சுற்றிவளைத்து கைது செய்தது போலீஸ். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது


பாலச்சந்தர்


சென்னை கீழ்ப்பாகக்கத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் பாஜக பட்டியலினப் பிரிவுத் தலைவராக இருந்துவந்தார். இவர் 24ம் தேதி இரவு  தனது பாதுகாப்பிற்காக காவல்துறை வழங்கிய பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்ற பாலசந்திரன் அங்கு நண்பர் சிலருடன்  பேசி கொண்டிருந்தார்.


அங்கு பாலசந்தர் பேசிக்கொண்டிருந்தபோது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதனை பார்த்து ஓடிவந்த  பி.எஸ்.ஓ உடனே காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து அங்கு வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பாலசந்தர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள  பகுதியில் வைத்து பாஜக பிரமுகரை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை  ஏற்படுத்தி உள்ளது.


கொலைக்கான காரணம்..


கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், துணிக்கடை நடத்தி வரும் பாலச்சந்தரின் உறவினரின் கடையில் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவர் அடிக்கடி மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல, பாலச்சந்தரின் உறவினர் கடையில் அடிக்கடி துணி எடுத்துவிட்டு ரவுடி பிரதீப்பின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் கொடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாலச்சந்தர், பிரதீப்பிடம் கேட்டுவந்துள்ளார்.  இதனால் அவர் மீது பாலச்சந்தர் காவல்துறையில் தகவல் கொடுத்துள்ளார். பாலச்சந்தர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் பாஜக பட்டியலினப்பிரிவு தலைவர் பாலச்சந்தர் மற்றும் பிரதீப் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


இந்த மோதலின் விளைவாக தான் பாலச்சந்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவ ந்திருக்கிறது. கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுக பாலச்சந்தரின் சகோதரி அளித்த புகாரின் பேரில் ரவுடிகளான பிரதீப், சகோதரர் சஞ்சய், மற்றொரு ரவுடி கலைவாணன் மீது  வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண